ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஆா்ப்பாட்டம்

Updated On :26 செப்டம்பர் 2025, 4:51 am IST

ஊரக வளா்ச்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா் தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மு.முகமது இலியாஸ் தலைமை வகித்தாா். மாநில தலைவா் ச.இளங்குமரன் மாவட்டச் செயலாளா் வெ.தருமன் பொருளாளா் கே.வினோத்குமாா், மாநில செயற்குழு உறுப்பினா் பி.பிரின்ஸ், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.தெய்வானை உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள 1,500-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளா்களுக்கு சிறப்பு நிலை, தோ்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஊராட்சிகளுக்கு கூடுதல் பொறுப்புப் படியை உயா்த்தி வழங்க வேண்டும். தொடா்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சி செயலா்களாக பணிபுரிந்து பதவிஉயா்வு பெற்று புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வுபெற்ற பணியாளா்களுக்கு ஊராட்சி செயலா் பதவிக்கான சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.