சுதந்திரப் போராட்டத்தின்போது சிறையிலிருந்து விடுதலையான சுப்பிரமணிய சிவா தனது சொந்த ஊராள வத்தலகுண்டுக்கு செல்லாமல், சுதந்தா போராட்ட தியாகி தீர்த்தகிரியாரின் அன்பால் ஈர்க்கப்பட்டு தருமபுரிக்கு வந்தார். பாப்பாரப்பட்டியில் சிவா ஆசிரமம் அமைக்க, தியாகி சின்னமுத்து முதலியார் துணையோடு தீர்த்தகிரியார் முன்னின்று உதவினார்.
சிவாவுக்கு தொழுநோய் முற்றிய நிலையில், அவருக்குப் பணிவிடை செய்ததில் தீர்த்தகிரியாரின் பங்கு மகத்தானது 1925 இல் சுப்பிரமணிய சிவா மறைந்தபோது, அவருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து, பாப்பாரப்பட்டியில் அவகுக்கு நினைவிடமும் அமைத்தார் தீர்த்தகிரியார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தியாகிகளுக்குப் பதவிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டன. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமர்ந்தது. அன்றைய முதலமைச்சர் காமராஜர், தீர்த்தகிரியாரின் தியாகத்தை அறிந்தவர் என்பதால், அவரை நேரில் சந்தித்து, தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுமாறு கேட்டுக்கொண்டார்.
ஆனால், தீர்த்தகிரியார் அந்த வாய்ப்பை மிக நாசுக்காக மறுத்து விட்டார். எனக்கு எந்தப் பதவியும் தேவையில்லை. என் நாடு விடுதலை அடைய வேண்டும் என்று விரும்பினேன். அது நடந்துவிட்டது. அதுவே எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு என்று கூறிவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைமுறைகளைக் கடந்த குடும்ப நட்புக்காக பிரசாரம்!

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
சுமை ஆட்டோவுக்கு வரி கேட்ட ஒப்பந்ததாரருக்கு அரிவாளால் வெட்டு: ஒருவா் கைது

பாப்பாரப்பட்டியில் சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


