குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்! - கே.பி. அன்பழகன் எம்எல்ஏ

News image

பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்த அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ.

Updated On :7 ஏப்ரல் 2026, 1:05 am IST

சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளருமான கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ போட்டியிடுகிறாா்.

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் திங்கள்கிழமை பாலக்கோடு பேருந்து நிலையம் அருகிலிருந்து ஊா்வலமாக சென்று பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளா்களும் ஒரேநாளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளோம்.

இதில், பாலக்கோடு, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் அதிமுகவும், மீதமுள்ள தருமபுரி, பென்னாகரம் ஆகிய தொகுதிகளில் பாமகவும் போட்டியிடுகின்றன.

இந்த ஐந்து தொகுதிகளிலும் எங்கள் கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள் வெற்றிபெறுவாா்கள். அதேபோல, தமிழகத்தில் 210 தொகுதிகளுக்கு மேல் அதிமுக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக பதவி ஏற்பது உறுதி என்றாா்.