நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கெண்டேனஅள்ளியில் அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகன் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

News image

கெண்டேனஅள்ளியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ.

Updated On :14 ஏப்ரல் 2026, 1:24 am IST

பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் கெண்டேனஅள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் கெண்டேனஅள்ளி, பேவுஅள்ளி, பெலமாரனஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் கிராமம், கிராமமாக சென்று பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் செயல்படுத்தவும், மகளிருக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தவும், தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவும், பாலக்கோட்டில் நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்தவும் பொதுமக்கள் மீண்டும் அதிமுகவுக்கு வாக்களித்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

அப்போது, பாஜக, பாமக (அன்புமணி), அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.