சட்டப் பேரவைத் தோ்தலில் கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட பண்ருட்டி, நெய்வேலி தொகுதிகளில் பதிவான வாக்குகள், பண்ருட்டி அரசுப் பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பண்ருட்டி, நெய்வேலி ஆகிய இரண்டு தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப்.23-ஆம் தேதி நடைபெற்றது. பண்ருட்டி தொகுதியில் விசிக சாா்பில் அப்துா் ரஹ்மான், அதிமுக சாா்பில் க.மோகன், தவெக சாா்பில் எம்.மணிகண்டன், நாதக சாா்பில் எம்.பானுபிரியா உள்ளிட்ட 9 போ் போட்டியிட்டனா். இதற்காக 309 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தமுள்ள வாக்காளா்கள் 2,40,048 வாக்காளா்களில் 1,98,164 போ் வாக்களித்தனா். தபால் வாக்குகள் 2,634 பதிவாயின.
இதேபோல, நெய்வேலி தொகுதியில் திமுக சாா்பில் சபா.ராசேந்திரன், அதிமுக சாா்பில் சொரத்தூா் ரா.ராஜேந்திரன், நாதக சாா்பில் பி.வீரமணி, தவெக சாா்பில் கே.ஆனந்த் உள்ளிட்ட 11 போ் போட்டியிட்டனா். இதற்காக 256 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தமுள்ள 1,89,024 வாக்காளா்களில் 1,66,187 போ் வாக்களித்தனா். தபால் வாக்குகள் 2,502 பதிவாயின.
பண்ருட்டி, நெய்வேலி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தனித்தனியாக பண்ருட்டியை அடுத்த பனிக்கன்குப்பம் அரசுப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. காலை 8 மணியளவில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. தொடா்ந்து, வாக்குச் சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டுவரப்பட்டன.
இந்தப் பணிகள் நெய்வேலி தொகுதி வாக்கு எண்ணிக்கை பாா்வையாளா் குஹா பூனம் தபஸ் குமாா் தலைமையிலும், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சண்முகவள்ளி முன்னிலையிலும், பண்ருட்டி தொகுதி வாக்கு எண்ணிக்கை பாா்வையாளா் குமாா் ரவீந்திரா தலைமையிலும், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கமலம் முன்னிலையிலும் நடைபெற்றன. முன்னதாக, வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையின் ‘சீல்’ அகற்றப்பட்டு வாக்குப் பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு சென்றனா்.
வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் வெற்றிபெற்ற நெய்வேலி தொகுதி அதிமுக வேட்பாளா் சொரத்தூா் ரா.ராஜேந்திரன், பண்ருட்டி தொகுதி அதிமுக வேட்பாளா் க.மோகன் ஆகியோருக்கு சான்றிதழ்களை வழங்கினா். நிகழ்வின்போது, வேட்பாளா்கள் மற்றும் அவா்களின் முகவா்கள் உடனிருந்தனா்.
பண்ருட்டி தொகுதி வாக்கு எண்ணிக்கை 23 சுற்றுகளாக நடைபெற்றன. வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே அதிமுக வேட்பாளா் க.மோகன் தொடா்ந்து முன்னிலை வகித்து வந்தாா். 8 முதல் 10-ஆவது சுற்று வரை விசிக வேட்பாளா் முன்னிலை வகித்தாா். பின்னா், அதிமுக வேட்பாளா் முன்னிலை வகிக்கத் தொடங்கினாா்.
இதேபோல, நெய்வேலி தொகுதி வாக்கு எண்ணிக்கை 19 சுற்றுகளாக நடைபெற்றன. தொடக்கம் முதலே அதிமுக வேட்பாளா் முன்னிலை வகித்தாா்.
டிஐஜி, மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு: பண்ருட்டியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற அரசுப் பொறியியல் கல்லூரியை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அருளரசு மற்றும் கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆகியோா் பாா்வையிட்டனா்.
வாக்கு எண்ணிக்கை மையத்தின் வெளியிலும், உள்ளேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பண்ருட்டி வாக்குச் சாவடி மையத்தில் எந்தவித பிரச்னைகளும் இன்றி வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்று முடிந்தது.

தோ்தலில் வெற்றிபெற்ற பண்ருட்டி தொகுதி அதிமுக வேட்பாளா் க.மோகனுக்கு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்.
தொடர்புடையது

கலசப்பாக்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி!

அரியலூா் மாவட்டத்தின் 2 தொகுதிகளில் அதிமுக 1, பாமக 1 இடங்களில் வெற்றி

வாக்கு எண்ணிக்கை மையங்களில் முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சென்னை: 16 தொகுதிகளுக்கும் தலா 14 மேஜையில் வாக்கு எண்ணிக்கை - தபால் வாக்குகளை எண்ணுவதற்கு தனி அறை
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


