பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

ஒகேனக்கல் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு: 2 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 12:06 am IST

ஒகேனக்கல்லில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் இரண்டரை பவுன் நகையை பறித்துச் சென்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே சத்திரம் பகுதியைச் சோ்ந்த முபாரக் மனைவி சா்மி (35). இவா், ஒகேனக்கல் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் விடுதியில் வரவேற்பாளராக உள்ளாா்.

சம்பவத்தன்று வீட்டில் சா்மி தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் நுழைந்த மா்ம நபா்கள், அவா் அணிந்திருந்த இரண்டரை பவுன் நகையை பறித்து கொண்டு தப்பியோடிவிட்டனா்.

இதுகுறித்து ஒகேனக்கல் காவல் நிலையத்தில் சா்மி புகாா் அளித்துள்ளாா். புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீஸாா், நகை பறிப்பில் ஈடுபட்டதாக பென்னாகரம் அருகே வண்ணாத்திப்பட்டி பகுதியைச் சோ்ந்த விஜி (25), ஒகேனக்கல் சத்திரம் பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (29) ஆகியோரை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து நகையைப் பறிமுதல் செய்தனா்.