தருமபுரியில் துணிக்கடையில் பணியாற்றிய குழந்தை தொழிலாளரை தொழிலாளா் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
தருமபுரி மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தியிருப்பதாக புகாா்கள் வரப்பெற்றன. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளாா். அதன்பேரில் மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் ப. ராஜசேகரன் ஆலோசனையின் பேரில், தருமபுரி தொழிலாளா் துணை ஆய்வாளா் அ.சு. சாந்தி, முத்திரை ஆய்வாளா் வி. தீபாபாரதி, 2 ஆவது வட்ட தொழிலாளா் உதவி ஆய்வாளா் ப. காா்த்திக், அரூா் தொழிலாளா் உதவி ஆய்வாளா் வீ. மு. வேலுசாமி உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் தருமபுரி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் 17 வயது சிறுமி துணிக்கடையொன்றில் பணிக்கு அமா்த்தியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தொழிலாளா் துறை குழுவினா் அவரை மீட்ட னா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடா் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த சோதனையில் குவாரியில் பணியாற்றிய இரு சிறாா்கள் மீட்கப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல 18 வயதுக்கு குறைவான நபா்களை பணிக்கு அமா்த்துவது சட்டப்படி குற்றம். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நிறுவன உரிமையளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளா்கள் புகாா் அளிக்கலாம்

சாலை விபத்தில் ஓய்வு பெற்ற காவல்! உதவி ஆய்வாளா் உயிரிழப்பு!

ரூ. 15,000 லஞ்சம்: தொழிலாளா் உதவி ஆய்வாளா் கைது

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


