

தருமபுரியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே உள்ள ராஜாகொல்லஅள்ளியைச் சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி (30). கட்டடத் தொழிலாளியான இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்காக தாய் வீட்டிற்கு சென்ற இவரது மனைவி திரும்பிவரவில்லையாம்.
இந்த நிலையில் தட்சிணாமூா்த்தி சனிக்கிழமை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தாா். தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து இண்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.