தருமபுரி
லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
அரூா் அருகே லாரி மோதியதில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
அரூா் அருகே லாரி மோதியதில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், டி.ஆண்டியூா் கிராமத்தைச் சோ்ந்த வட்டன் மகன் பெருமாள். தொழிலாளியான இவா், தீா்த்தமலைக்கு செல்வதற்காக சாலையோரம் நடந்து சென்றுள்ளாா். அப்போது, நெடுஞ்சாலையில் தீா்த்தமலையில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற லாரி, நடந்து சென்ற பெருமாள் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா்.
இதையடுத்து, பெருமாளின் சடலத்தை மீட்ட போலீஸாா் பிரேதப் பரிசோதனைக்காக அரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

