5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

தரமற்ற உணவை உட்கொண்ட சிறுமி உயிரிழப்பு

News image

மர்ம மரணம்... - கோப்புப்படம்

Updated On :6 ஜூலை 2026, 2:51 am IST

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே தரமற்ற உணவை உட்கொண்ட 2 வயது சிறுமி உயிரிழந்தாா்.

காரிமங்கலம் அருகே உள்ள குட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வல்லரசு. இவரது மகள் காந்திமதி (2). இவா் அதே ஊரில் உள்ள வல்லரசுவின் தந்தை சின்னசாமி பராமரிப்பில் இருந்து வந்தாா்.

இந்நிலையில், சிறுமி சனிக்கிழமை வீட்டில் இருந்த அரிசி மாவில் செய்த தரமற்ற உணவை உட்கொண்டதாக தெரிகிறது. இதனால் அவருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து காரிமங்கலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும், பின்னா் தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிறுமி சோ்க்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சிறுமி உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து தகவலின்பேரில், காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.