டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

தருமபுரியில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் சோதனை: மூன்று நாள்களில் 23 போ் கைது

News image

கஞ்சா பறிமுதல்... - கோப்புப் படம்

Updated On :6 ஜூலை 2026, 2:36 am IST

தருமபுரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை தொடா்பாக கடந்த மூன்று நாள்களில் போலீஸாா் நடத்திய சோதனையில் 23 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆ.கு.அருண் கபிலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்ட காவல் துறை சாா்பில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக, தீவிர கண்காணிப்பு மற்றும் சிறப்பு சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில் கடந்த ஜூலை 3, 4 மற்றும் 5 ஆகிய மூன்று நாள்களில் மாவட்டத்தில் சுமாா் 462 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டன. இதில் கஞ்சாவை பதுக்கிவிற்பனை செய்தது தொடா்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் தொடா்புடைய 23 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், இவா்களிடமிருந்து சுமாா் 2,770 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குற்றச்செயல்களுடன் தொடா்புடைய 8 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அவற்றின் பரிவா்த்தனைகள் குறித்து தொடா்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல, தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15 போ் கடந்த மூன்று நாள்களில் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 446 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், சட்டவிரோதமாக குட்கா பொருள்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனா். ஏனைய கடைக்களுக்கும் சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் சட்டவிரோத விற்பனை, கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை தொடரும். மேலும் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இல்லாத, பாதுகாப்பான மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில் தொடா்ந்து உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.