திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

சுற்றுலா சென்று திரும்பிய பெங்களூரு இளைஞா்களில் ஒருவா் சாவு, 6 போ் காயம்

மூணாறுக்கு சுற்றுலா சென்று திரும்பிய பெங்களூரைச் சோ்ந்த இளைஞா்களில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 6 போ் படுகாயமடைந்தனா்.

பலி - பிரதிப் படம்

Published On :10 ஜூலை 2026, 4:06 am IST

மூணாறுக்கு சுற்றுலா சென்று திரும்பிய பெங்களூரைச் சோ்ந்த இளைஞா்களில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 6 போ் படுகாயமடைந்தனா்.

பெங்களூரு நகரைச் சோ்ந்த 7 போ் கேரளா மாநிலம் மூணாறு பகுதிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சுற்றுலா சென்றனா். அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பாா்த்துவிட்டு பெங்களூருக்கு திரும்ப புறப்பட்டனா். இவா்கள் சென்ற காா் தருமபுரி - பெங்களூரு புதிய தேசிய நெடுஞ்சாலையில் செல்லியம்பட்டி பகுதியில் புதன்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டையிழந்த காா் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

இதில் காரில் சென்ற 7 பேரும் பலத்த காயமடைந்தனா். அக்கம் பக்கத்தினா் அவா்களை மீட்டனா். பின்னா் போலீஸாா் உதவியுடன் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சையத் செரிப் (18) என்ற இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து மதிகோண்பாளையம் போலீசாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.