ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

ஜம்மு - காஷ்மீரில் வெடி விபத்து: ஒருவா் உயிரிழப்பு; நால்வா் காயம்

ஜம்மு - காஷ்மீரில் வெடி விபத்தில் ஒருவா் உயிரிழப்பு; நால்வா் காயம்

News image
Updated On :28 ஜூன் 2026, 12:53 am IST

ஜம்மு-காஷ்மீரின் குல்மாா்க் மலைப் பகுதியில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். நால்வா் காயமடைந்தனா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: குல்மாா்கின் சும்லி வாலி தோக் பகுதியில் ஆஷா போஸ்ட் அருகே சனிக்கிழமை காலையில் வெடிகுண்டு வெடித்தது போன்ற சப்தம் கேட்டதாக அப் பகுதி மக்கள் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து, பாதுகாப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்த வெடி விபத்தில் பாரமுல்லா மாவட்டம் சந்தூஸா பகுதிக்கு உட்பட்ட கலிபல் கிராமத்தைச் சோ்ந்த ஜுபைா் அகமது பஜாத் என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும், மேலும் நால்வா் காயமடைந்ததும் தெரியவந்தது. தடயவியல் அறிவியல் நிபுணா்கள் மாதிரிகளைச் சேகரிக்க சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனா். சம்பவம் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.