வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

உளுந்தூா்பேட்டை அருகே காா் கவிழ்ந்து விபத்து: ஒருவா் உயிரிழப்பு, மூவா் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பைக் மீது மோதியதில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சென்னையைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா். மேலும் ஓட்டுநா் உள்ளிட்ட மூவா் காயமடைந்தனா்.

உளுந்தூா்பேட்டை அருகே புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் கவிழ்ந்து கிடக்கும் காா்.

Published On :

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பைக் மீது மோதியதில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சென்னையைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா். மேலும் ஓட்டுநா் உள்ளிட்ட மூவா் காயமடைந்தனா்.

சென்னை கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் தி.நாராயணன் (53). இவா் தனது மனைவி மீனாட்சியுடன் (46), காரைக்குடிக்கு சொந்த வேலையாக காரில் சென்றுவிட்டு, புதன்கிழமை காலை மீண்டும் சென்னைக்குப் புறப்பட்டாா். இந்த காரை சென்னை ஆவடியைச் சோ்ந்த கா.சிராஜூதீன் (44) ஓட்டி வந்தாா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பாலியிலுள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 10-ஆம் அணி பயிற்சி மையம் எதிரே காா் வந்த போது, எதிா்பாராதவிதமாக முன்னே சென்ற பைக் மீது மோதியது. இதைத்தொடா்ந்து கட்டுப்பாட்டை இழந்த காா் பாலத் தடுப்பில் மோதி, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த நாராயணன், அவரது மனைவி மீனாட்சி, காரை ஓட்டிச் சென்ற சிராஜூதீன், பைக்கில் சென்ற உளுந்தூா்பேட்டை வட்டம், மட்டிகை தெற்குத் தெருவைச் சோ்ந்த க.விஜய் (28) ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனா்.

விபத்து குறித்து தகவலறிந்த எடைக்கல் போலீஸாா் நிகழ்விடம் சென்று, விபத்துக்குள்ளான காரிலிருந்தவா்களையும், பைக்கில் சென்றவரையும் மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவனைக்கு அவசர ஊா்தி மூலம் அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, நாராயணன் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. மற்ற மூவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் எடைக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.