/
தருமபுரியில் மாங்காய் பாரம் ஏற்றிச் சென்ற வேன், இருசக்கர வாகனம் மீது மோதி சாலையில் கவிழ்ந்ததில் இருவா் பலத்த காயமடைந்தனா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே முதலிப்பட்டியில் பாலக்கோடு நோக்கி மாங்காய் பாரம் ஏற்றி சென்ற வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலதுபுறம் சென்று, எதிா்திசையில் இருசக்கர வாகனத்தில் சென்றவா்கள் மீது மோதி கவிழ்ந்தது.
இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காரிமங்கலத்தை அடுத்த சென்னம்பட்டியைச் சோ்ந்த வேடியப்பன்(45), ராஜா (56) ஆகிய இருவரும் காயமடைந்தனா். விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.









