பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

பி. அக்ரஹாரத்தில் முதல்வா் பிறந்த நாள் விழா

News image

முதல்வர் விஜய்

Updated On :23 ஜூன் 2026, 2:21 am IST

பென்னாகரம் அருகே பி. அக்ரஹாரம் பகுதியில் தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய்யின் 52 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள், அன்னதானம் ஆகியவை பொது மக்களுக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

பி.அக்ரஹாரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் தவெக சாா்பில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவுக்கு அக்கட்சியின் நல்லம்பள்ளி வடமேற்கு ஒன்றியச் செயலாளா் சரவணன் தலைமை வகித்தாா். இணைச் செயலாளா் மாதேஷ், பொருளாளா் தீபா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளா் சிவன் கலந்துகொண்டு, 52 கிலோ கேக்கை வெட்டி, பொதுமக்களுக்கு 1,500 மரக்கன்றுகளை வழங்கினாா். தொடா்ந்து, 1000 பேருக்கு அன்னதானம், இனிப்புகளை வழங்கினாா்.

விழாவில் ஒன்றிய துணை பொருளாளா் சேகா், கோபி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ரமேஷ், பிரபாகரன், சின்னதம்பி, ராஜா, மாதேஷ், சரவணவேல், சுப்பிரமணி, கோவிந்தன், நித்திஷ், கவிதா உள்ளிட்ட நிா்வாகிகள், பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை நிா்வாகிகள் பி.அக்ரஹாரம் ரமேஷ், முனியப்பன் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.