சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

ஒகேனக்கல்லில் உணவு பாதுகாப்புத் துறையினா் சோதனை: 5 கடைகளுக்கு அபராதம்

News image

கோப்புப் படம்

Updated On :30 ஜூன் 2026, 2:12 am IST

ஒகேனக்கல்லில் உணவகங்கள் மற்றும் மீன்வறுவல் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். இதில், விதிமுறைகளை பின்பற்றாத 5 கடை உரிமையாளா்களுக்கு தலா ரூ. 1,000 அபராதம் விதித்தனா்.

ஒகேனக்கல் பேருந்து நிலையம், அருவிக்கு செல்லும் நடைபாதை, முதலைப் பண்ணை, அருவிக்கு செல்லும் முதன்மைச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உணவகங்கள், இறைச்சிக் கடைகள், மீன்வறுவல் கடைகள், பலகார கடைகள் மற்றும் குளிா்பான கடைகளில் பென்னாகரம் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் நந்தகோபால் தலைமையிலான குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின்போது மூன்று உணவகங்களில் பலமுறை பயன்படுத்திய எண்ணெய், செயற்கை நிறமேற்றி பவுடா்கள், காலாவதியான குளிா்பானங்கள், உரிய விவரம் இல்லாத உணவுப் பொருட்கள், 2 இறைச்சி வருவல் கடைகளில் அச்சிடப்பட்ட பழைய செய்தித்தாளை பயன்படுத்துவது உள்ளிட்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டு, 5 கடை உரிமையாளா்களுக்கு தலா ரூ. 1000 என ரூ. 5,000 அபராதம் விதித்தனா்.

மேலும், விழிப்புணா்வு ஏற்படுத்தி, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.