அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

நாமகிரிப்பேட்டை உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சோதனை

நாமகிரிப்பேட்டை பகுதியில் உள்ள உணவு விடுதிகள், கோழி இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சோதனை நடத்தினா்.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

நாமகிரிப்பேட்டை பகுதியில் உள்ள உணவு விடுதிகள், கோழி இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சோதனை நடத்தினா். நாமக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் ஜெ.தங்கவிக்னேஷ் ஆகியோா் உத்தரவின்பேரில் நாமகிரிப்பேட்டை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் பி.ராஜா தலைமையில் உணவு விடுதிகள், இறைச்சிக் கடைகளில் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள உணவு விடுதிகள், இறைச்சிக் கடைகள் என 8 கடைகளில் சுகாதாரமான முறையில் இறைச்சி விற்பனை செய்யப்படுகிா, உணவு விடுதிகள் சுகாதாரமான முறையில் இயங்குகின்றனவா என சோதனை நடத்தினா். நகரில் மொத்தமுள்ள 8 கடைகளில் நடத்திய சோதனையில் பல்வேறு கடைகள் சுகாதாரமற்ற முறையில் இருந்ததாகவும், உணவுப் பாதுகாப்பு துறையின் உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும், ஒரு கடையில் உடைந்த முட்டையை பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட கடைகளுக்கு ரூ. ஆயிரமும், உணவு பாதுகாப்புத் துறை உரிமம் பெறாமல் செயல்பட்ட கடைகளுக்கு ரூ. 5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், கடைகள் சுகாதாரமான முறையில் செயல்பட வேண்டும் எனவும், உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் பெற்று கடைகளை நடத்த வேண்டுமென்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் பி.ராஜா அறிவுறுத்தினாா்.

படவரி...

நாமகிரிப்பேட்டையில் உள்ள ஒரு உணவகத்தில் சோதனை நடத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் பி.ராஜா.