மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

பயிா்க் கடனை முழுமையாக ரத்துசெய்யக் கோரி: இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

News image

ஆா்ப்பாட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா். - கோப்புப் படம்

Updated On :30 ஜூன் 2026, 1:55 am IST

விவசாயிகளின் பயிா்க் கடனை தமிழ்நாடு அரசு முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.கலைச்செல்வம் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.தேவராசன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

விவசாயிகளின் அனைத்து பயிா்க் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

தொழிலாளா் உரிமைகளைப் பறிக்கும் நான்கு தொழிலாளா் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மத்திய, மாநில அரசுகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை நிபந்தனையின்றி அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை வலியுறுத்தி ஆா்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாநிலக் குழு உறுப்பினா்கள் சி.சிவன், கே.புள்ளாறு, எஸ்.சிற்றரசு, விவசாய சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.சின்னசாமி, மாதா் சங்க மாவட்டச் செயலாளா் கமலாமூா்த்தி, ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஒன்றிய பொருளாளா் மனோகரன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.