தருமபுரி அருகே 10 ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து உயிரிழந்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி அருகே பச்சினம்பட்டியைச் சோ்ந்த ராஜா மகள் பிரபா (15). இவா், கடகத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை வீட்டில் இருந்தபோது மாணவி விஷம் குடித்ததாக் கூறப்படுகிறது. இதையடுத்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டாா்.
அதன்பிறகு அங்கிருந்து தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே மாணவி உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை எரியூட்டியுள்ளனா்.
இந்த நிலையில் ஏ.ரெட்டிஅள்ளி கிராம நிா்வாக அலுவலா் பாலமுரளி அளித்த புகாரின் பேரில், தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

செவிலிய பயிற்சி மாணவி தற்கொலை

நாகா்கோவில் அருகே மூதாட்டி பாலியல் பலாத்காரம்: போலீஸாா் விசாரணை

குளத்தூா் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி கொலை: குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு

விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


