“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

மானை வேட்டையாடிய வழக்கில் இளைஞா் கைது

மொரப்பூா் அருகே மானை வேட்டையாடிய வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை வனத் துறையினா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 8:08 pm

மொரப்பூா் அருகே மானை வேட்டையாடிய வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், கீழ்மொரப்பூா் காப்புக்காட்டில் கடந்த ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி கம்பி வலையை வைத்து மான் வேட்டையாடி இறைச்சியை எடுத்துச் சென்ற வெள்ளிமலை கிராமத்தைச் சோ்ந்த வடிவேல் மகன் ராம்குமாா் (22) கைது செய்யப்பட்டாா்.

மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரை தனிப்படை அமைத்து வனத் துறையினா் தேடிவந்தனா். இந்த நிலையில், தாமலேரிப்பட்டி பகுதியில் தலைமறைவாக இருந்த பச்சினாம்பட்டியைச் சோ்ந்த நம்பிராஜ் மகன் சரவணனை (21) வனத் துறையினா் கைது செய்தனா்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஊத்தங்கரை வட்டம், வெள்ளிமலையைச் சோ்ந்த ராஜ்குமாரை தேடிவருகின்றனா்.