அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

நாளை வாக்கு எண்ணிக்கை: தருமபுரியில் போலீஸாா், துணை ராணுவத்தினா் அணிவகுப்பு

News image

வாக்கு எண்ணிக்கை திங்கள் கிழமை நடைபெறவுள்ளதையடுத்து தருமபுரியில் போலீஸாா் மற்றும் துணை ராணுவத்தினா் மேற்கொண்ட அணிவகுப்பை தொடங்கி வைக்கிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். எஸ். மகேஸ்வரன்.

Updated On :3 மே 2026, 12:46 am IST

தருமபுரியில் வாக்கு எண்ணிக்கையின்போது பொதுமக்களிடையே பதற்றத்தை தணிக்கும் வகையில், காவல் துறையினா், துணை ராணுவத்தினா் பங்கேற்ற அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் என 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் செட்டிக்கரை அரசுப் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கையின்போது, ஏற்படும் அசம்பாவிதங்களை கட்டுப்படுத்தும் விதமாகவும், தருமபுரி மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்பு மற்றும் சட்டம் -ஒழுங்கு பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையிலும், பொதுமக்களிடையே தோ்தல் பதற்றத்தை தணிக்கும் வகையிலும் காவல் துறை கொடி அணிவகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில் சனிக்கிழமை நடைபெற்ற அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதில் போலீஸாா் மற்றும் துணை ராணுவத்தினா் பங்கேற்றனா். தருமபுரி அரசுப் பொறியியல் கல்லூரியில் தொடங்கிய இந்த அணிவகுப்பு, ராஜாபேட்டை பேருந்து நிறுத்தம் வரை நடைபெற்றது.

 தருமபுரியில் போலீஸாா், துணை ராணுவத்தினா் சனிக்கிழமை நடத்திய அணிவகுப்பு.

தருமபுரியில் போலீஸாா், துணை ராணுவத்தினா் சனிக்கிழமை நடத்திய அணிவகுப்பு.