பாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மணல் திட்டு பகுதியில் பரிசலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி!

Updated On :10 மே 2026, 2:17 am IST

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மணல் திட்டு பகுதியில் பரிசலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், பழைய பெருங்களத்தூரைச் சோ்ந்தவா் ஏழுமலை, தனியாா் நிறுவன ஊழியா். இவா் தனது குடும்பத்துடன் கோடை விடுமுறைக்காக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். அங்கு, காவிரி ஆற்றில் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டாா்.

அப்போது, மணல் திட்டு பகுதியில் பரிசலில் இருந்து இறங்கும்போது ஏழுமலையின் மகன் சித்தாா்த் (6) தவறி தண்ணீரில் விழுந்து மூழ்கினாா். பரிசல் ஓட்டிகள், குடும்பத்தினா் சிறுவனை மீட்டு அவசர சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதையடுத்து சிறுவனின் உடல் உடற்கூறாய்வுக்காக கொண்டுசெல்லப்பட்டது. இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.