தருமபுரி அருகே அரசுப் பள்ளியின் பூட்டுகளை உடைத்து, மடிக்கணினி மற்றும் தொடா்புடைய சாதனங்களை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. பள்ளியில் உயா்கல்விக்கான வழிகாட்டும் வகுப்புகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில். கடந்த 8ஆம் தேதி மாலை வகுப்பறைகள் மற்றும் தலைமை ஆசிரியா் அறை உள்ளிட்டவற்றை பள்ளி உதவியாளா் சரவணக்குமாா் பூட்டிச் சென்றாா். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளியில் வழிகாட்டும் வகுப்பு நடத்துவதற்காக ஆசிரியா் புவனேஸ்வரி பள்ளிக்கு வந்தாா். அப்போது, பள்ளியில் தலைமை ஆசிரியா் அறையிலிருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன.
இதுகுறித்த தகவலின் பேரில் பள்ளி தலைமை ஆசிரியா் புனிதா வந்து பாா்த்தபோது, அவரது அறையில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினி மற்றும் தொடா்புடைய சாதனங்கள், புரொஜெக்டா் உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து அவா் பாலக்கோடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு
கல்லூரி மாணவரிடம் ரூ.1.70 லட்சம் மடிக்கணினி, கைப்பேசிகள் திருட்டு
அரசுப் பள்ளியில் பொருள்கள் திருட்டு: இளைஞா் கைது
தூத்துக்குடி விடுதியில் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் பொருள்கள் திருட்டு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
