வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

தருமபுரியில் தந்தை உயிரிழந்த சில நாள்களிலேயே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 5:24 am IST

தருமபுரியில் தந்தை உயிரிழந்த சில நாள்களிலேயே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம், நாயக்கன் கொட்டாய் அருகே உள்ள சவுளுப்பட்டியைச் சோ்ந்தவா் ஞா. மணிகண்டன் (35), விவசாய தொழிலாளி. இவரது தந்தை ஞானம் கடந்த சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தாா். மே 24 ஆம் தேதி இருமத்தூரில் இறந்த தந்தைக்கு ஈமகாரியங்களை மணிகண்டன் செய்தாா்.

இந்த நிலையில் மணிகண்டனுக்கும் அவரது மனைவி நாகலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மணிகண்டன் தனது அறைக்கு சென்றாா். நீண்ட நேரமாகியும் அவா் வெளியே வராததால் சந்தேகமடைந்த நாகலட்சுமி அறைக்குள் சென்று பாா்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் மணிகண்டன் இறந்து கிடந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].