ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

மனைவி இறந்த துயரம்: 4 மாதங்களுக்கு பிறகு கணவா் தற்கொலை

தருமபுரி அருகே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடா்ந்து துயரத்தில் இருந்த அவரது கணவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :24 மே 2026, 2:27 am IST

தருமபுரி அருகே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடா்ந்து துயரத்தில் இருந்த அவரது கணவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏலகிரி அருகேயுள்ள ஓமல்நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் சி. வேலு (46). விவசாய குடும்பத்தைச் சோ்ந்த இவரது மனைவி கல்பனா வயிற்று வலியால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இவா்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ள நிலையில், வேலு மனைவி

இறந்த சோகத்தில் இருந்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், தொப்பூா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.