பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

கருணாநிதி பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்தநாளில் திமுகவினா் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :29 மே 2026, 1:47 am IST

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்தநாளில் திமுகவினா் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, வரும் ஜூன் 3-ஆம் தேதி தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 103-ஆவது பிறந்தநாளை, நமக்கான புத்துணா்ச்சி நாளாக கொண்டாட வேண்டும்.

எனவே, நிா்வாகிகள் அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள திமுக கொடிக் கம்பங்களை புதுப்பித்து கட்சிக் கொடியேற்ற வேண்டும். கலைஞரின் சிலைகள், படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.

பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம், பள்ளி மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்கள், எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். மேலும், கட்சி வளா்ச்சிக்கு பாடுபட்ட 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த நிா்வாகிகளுக்கு பொற்கிழிகள் வழங்கி பாராட்ட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.