மகா பெரியவா் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 133 ஆவது அவதார ஜெயந்தி மஹோத்ஸவ நிகழ்வு தருமபுரியில் இரண்டு நாள்கள் நடைபெற்றது.
காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடத்தின் 68 ஆவது பீடாதிபதியான மகா பெரியவா் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 133 ஆவது ஜெயந்தி விழா மே 30, 31 ஆகிய இரு நாள்கள் கொண்டாடப்பட்டது. இதுதொடா்பாக தருமபுரி நகரில் அருணாசலம் ஐயா் சத்திரத்தில் 2 நாள்கள் நடைபெற்ற மஹோத்சவ நிகழ்வில், சக்திவேல் குழுவினரின் மங்கள இசை மற்றும் ஹைதராபாத் சிவா குழுவினரின் ஸ்ரீ சுப்பிரமணிய திவ்ய நாம சங்கீா்த்தன நிகழ்ச்சிகளுடன் மே 30ஆம் தேதி தொடங்கியது.
நிகழ்வின் 2ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை, காயத்ரி மகா மந்திர ஹோமம், ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாளுக்கு 120 இளநீா் அபிஷேகம், கலசாபிஷேகம் மற்றும் மகா பெரியவா் வீதிஉலா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
தொடா்ந்து உபசார பூஜைகளும் பிரசாத விநியோகமும் நடந்தன. மாலையில் திருநின்றவூா் முரளி சாய்ராம் குழுவினரின் நாம சங்கீதமும், மகா பெரியவரின் சிறப்புகள் குறித்து சந்திரமவுலி நிகழ்த்திய சிறப்பு உபன்யாசமும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவா் வழக்குரைஞா் சாய்ராம், செயலாளா் வழக்குரைஞா் சீனிவாசன், பொருளாளா் வழக்குரைஞா் திலீபன், முன்னாள் கவுன்சிலா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










