மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கிருஷ்ணகிரியில் பயன்பாட்டுக்கு வராத புதிய மாவட்ட மைய நூலகம்

கிருஷ்ணகிரி, பிப். 16: கணினிமயமாக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகம் திறப்பு விழா நடத்தப்பட்டு 2 மாதங்களாகியும் இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. மாவட்டத்தில் உள்ள இளைஞர்களின் பொது

Updated On :20 செப்டம்பர் 2012, 1:27 am

கிருஷ்ணகிரி, பிப். 16: கணினிமயமாக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகம் திறப்பு விழா நடத்தப்பட்டு

2 மாதங்களாகியும் இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

மாவட்டத்தில் உள்ள இளைஞர்களின் பொது அறிவை மேம்படுத்தவும், அவர்கள் போட்டித் தேர்வில் பங்கேற்று வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில், கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் ரூ.70 லட்சம் மதிப்பில் கணினி மயமாக்கப்பட்ட நூலகம் கட்டப்பட்டுள்ளது.

பொது நூலகத் துறையால் இந்த நூலகக் கட்டடத்துக்கு கடந்த 16.12.09-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டடப் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், கடந்த ஆண்டு ஒசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது இந்த கணினிமயமாக்கப்பட்ட மாவட்ட மைய நூலகத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இந்த நூலகக் கட்டடத்தில் சுற்றுச்சுவர், நடைப்பாதைக்கான தரை மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சாய்வுதள பாதைக்கான கைப்பிடி போன்ற பணிகள் நிறைவடையாத நிலையில் உள்ளன.கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருகை தந்த சட்டமன்ற மதிப்பீட்டு குழு, உள்ளாட்சி அமைப்புகள் மாவட்ட நூலகத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.1 கோடி வரிபாக்கியை உடனே செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதுகுறித்து ஒரு மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இதுவரை நூலக வரியை உள்ளாட்சி அமைப்புகள் செலுத்தியதாக தெரியவில்லை. இதனால் புதிய கணினி நூலகத்துக்கான தடவாளப் பொருட்கள் வாங்க இயலாத நிலையில் மாவட்ட மைய நூலகம் உள்ளது.

இந்த புதிய கணினி மயமாக்கப்பட்ட மாவட்ட மைய நூலகத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே இங்குள்ள இளைஞர்களின் விருப்பமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.