பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரயிலில் சேலம் கோட்டத்துக்கான முன்பதிவை குறைக்கக் கூடாது

சேலம், ஜன. 8:  பெங்களூரு- எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரயிலில் சேலம் கோட்டத்துக்கான முன்பதிவு ஒதுக்கீட்டை குறைக்கக் கூடாது என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு சேலம் எம்.பி. செம்மலை கடிதம் அனுப்பியுள்ள
Published on

சேலம், ஜன. 8:  பெங்களூரு- எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரயிலில் சேலம் கோட்டத்துக்கான முன்பதிவு ஒதுக்கீட்டை குறைக்கக் கூடாது என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு சேலம் எம்.பி. செம்மலை கடிதம் அனுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 1998-ம் ஆண்டில் பெங்களூருவுக்கும் கோவைக்கும் இடையே இன்டர்சிட்டி ரயில் இயக்கப்பட்டது. இதனால் சேலம், ஈரோடு, திருப்பத்தூர், கோவை, நீலகிரி மாவட்ட மக்கள் பயன் அடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2007-ம் ஆண்டில் கோடை சிறப்பு ரயில் என்ற பெயரில் இந்த வண்டி தாற்காலிகமாக எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்பட்டு பின்னர் நிரந்தரமாக இயக்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் வரை கிட்டத்தட்ட 800 ரயில் டிக்கெட்டுகள் முன் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பிரச்னை இல்லாமல் முன்பதிவு செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜனவரி மாதம் முதல் கேரளத்துக்கு 80 சதவீத முன்பதிவு டிக்கெட்டுகளும், 20 சதவீத டிக்கெட்டுகள் மட்டுமே சேலம் கோட்டத்துக்கு உள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதனால் சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பயணிகள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ரயிலை எர்ணாகுளம் வரை நீட்டித்ததால் ஏற்பட்ட பாதிப்பை விட இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே சேலம் ரயில்வே கோட்ட பகுதிகளைச் சேர்ந்த ரயில்வே பயணிகளுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்கும் வகையில் இந்த ரயிலுக்கான முன்பதிவு ஒதுக்கீடு ஏற்கெனவே இருந்தபடியே தொடர வேண்டும் என்று செம்மலை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com