தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அசோக் லேலண்ட் தொழிற்சாலையின் முழு உற்பத்தியையும் முடக்கத் திட்டம்

ஓசூர், ஜன. 8: ஒசூர் அசோக் லேலண்ட் தொழிற்சாலையின் முழு உற்பத்தியையும் முடக்க ஜனநாயக மீட்புக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.  ஒசூர் அசோக் லேலண்ட் தொழிற்சாலை யூனிட் 2-ன் சங்கத் தேர்தலை நடத்தக்கோரி 3 நாள்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

ஓசூர், ஜன. 8: ஒசூர் அசோக் லேலண்ட் தொழிற்சாலையின் முழு உற்பத்தியையும் முடக்க ஜனநாயக மீட்புக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

 ஒசூர் அசோக் லேலண்ட் தொழிற்சாலை யூனிட் 2-ன் சங்கத் தேர்தலை நடத்தக்கோரி 3 நாள்களாக சங்கத் தலைவர் மைக்கல் பி.பெர்னான்டஸ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 இந்நிலையில், மைக்கல் பி.பெர்னான்டûஸ கைது செய்ய போலீஸôர் முயன்றனர். தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவரை கைது செய்வதை போலீஸôர் தவிர்த்தனர். இப்போராட்டத்துக்கு அதிமுக, கம்யூனிஸ்ட், பாஜக ஆதரவு தெரிவித்து வருகின்றன. 2 நாள்களாக உற்பத்தி பாதியாக குறைந்தது. ஞாயிற்றுக்கிழமை முதல் முழு உற்பத்தியையும் முடக்க திட்டமிட்டுள்ளனர். கடந்த 3 நாள்களாக 500 தொழிலாளர்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு உண்ணாவிரத்தில் பங்கேற்றுள்ளனர்.

 ஞாயிற்றுக்கிழமை முதல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூட தொழிற்சாலைக்குள் செல்வதை தடுக்க ஜனநாயக மீட்பு குழுவினர் முடிவு செய்துள்ளனர். எனவே, ஞாயிறு முதல் யூனிட் 2-ல் முழு உற்பத்தியும் முடக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், பணிக்குச் செல்லும் ஒப்பந்தத் தொழிலாளர்களை தடுக்கும்போது தகராறு ஏற்படும் சூழலும் நிலவுகிறது.

இதுதவிர, முதல் யூனிட்டின் உற்பத்தியை குறைக்கவும் மைக்கல் பி.பெர்னான்டஸ் அறிவுறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக, இந்தத் தொழிற்சாலைக்கு உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் 500-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களின் உற்பத்தியும் பாதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.