இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

சங்ககிரி, ஜன.8: கன்னந்தேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேசிய பசுமைப் படையின் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் மரக் கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை பள்ளிவளாகத்தில் நடைபெற்றது.  

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

சங்ககிரி, ஜன.8: கன்னந்தேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேசிய பசுமைப் படையின் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் மரக் கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை பள்ளிவளாகத்தில் நடைபெற்றது.

 தலைமையாசிரியர் கே.சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்டச் சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் என்.சிவக்குமார் முன்னிலை வகித்தார். சேலத்தைச் சேர்ந்த நகைக்கடை அதிபர்   டி. பிரபுராம்குமார் சுற்றுச் சூழல் குறித்து பேசினார். பின்னர் அவர் மண்ணில் மக்கக்கூடிய கைப் பைகளையும், மரக் கன்றுகளையும் பொதுமக்களிடம் வழங்கினார்.

 மகுடஞ்சாவடி பகுதியில் மாணவ, மாணவிகள் பேரணியாக சென்று பொதுமக்களிடம் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.  பின்னர் மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளை நடப்பட்டன.

 மருத்துவர்கள் ராமு, கே.தெய்வம், கோபாலகிருஷ்ணன், ஆசிரியர்கள் வி.தமிழரசன், ஆர்.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.