6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பொங்கலையொட்டி திமுக சார்பில் விளையாட்டுப் போட்டிகள்

நாமக்கல், ஜன.8: பொங்கல் பண்டிகையையொட்டி திமுக சார்பில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகளை நடத்துமாறு திமுகவினரை அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் த

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

நாமக்கல், ஜன.8: பொங்கல் பண்டிகையையொட்டி திமுக சார்பில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகளை நடத்துமாறு திமுகவினரை அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணை அமைச்சருமான செ. காந்திசெல்வன் கேட்டுக்கொண்டார்.

நாமக்கல் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து காந்திசெல்வன் பேசியது:

பொங்கல் தினத்தை மாவட்டம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். இவ்விழாவையொட்டி, திமுக சார்பில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும். போட்டிகளில் இளைஞர்களை அதிகளவு பங்கேற்க வைத்து பரிசளிக்க வேண்டும்.

நாமகிரிபேட்டையில் சமத்துவபுரம் கட்டும் பணி நிறைவடைந்து விட்டது. அதனைத் திறந்து வைக்க துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் நாமக்கல் வருகிறார். அப்போது நாமக்கல் குடிநீர்த் திட்டத்தையும் அவர் தொடக்கி வைக்கிறார். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் பணி இப்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. அந்த வளாகத்தின் திறப்பு விழாவும் விரைவில் நடத்தப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.