வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மேச்சேரியில் தக்காளி விலை சரிவு!

மேட்டூர், ஜன. 8: சேலம் மாவட்டம் மேச்சேரியில் தக்காளி விலை திடீரென சரிந்துள்ளது.  மேச்சேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மாணாவாரியாகவும், இறைவைப் பயிராகவும் தக்காளி பயிரிடப்படுகிறது. சமையலுக்கு மே

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

மேட்டூர், ஜன. 8: சேலம் மாவட்டம் மேச்சேரியில் தக்காளி விலை திடீரென சரிந்துள்ளது.

 மேச்சேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மாணாவாரியாகவும், இறைவைப் பயிராகவும் தக்காளி பயிரிடப்படுகிறது. சமையலுக்கு மேச்சேரி தக்காளி தனி ருசியைக் கொடுப்பதாகக் கூறப்படுவதால், நல்ல கிராக்கி இருந்து வருகிறதி.

 தற்ப்போது இங்கு தக்காளியின் சீசன் களைகட்டி உள்ளது. தக்காளி வரத்து அதிகரித்துள்ளதாலும், வெளியூர் மொத்த வியாபாரிகள் வராததாலும் தக்காளி விலை 15 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.

 கடந்த வாரம் 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.250 வரை விற்கப்பட்டது. இந்த வாரத்தில் ரூ.215 முதல் ரூ.225 வரை விற்கப்படுகிறது.

 தக்காளி சீசனில் மேச்சேரி வட்டாரத்தில் மூன்று மாதங்களுக்கு 5ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.