தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

சொட்டு நீர்ப் பாசன குழாய்கள் திருட்டு வழக்கில் மேலும் 2 பேர் கைது

அரூர் அருகே சொட்டு நீர்ப் பாசன குழாய்களை திருடியதாக மேலும் 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On :

அரூர் அருகே சொட்டு நீர்ப் பாசன குழாய்களை திருடியதாக மேலும் 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

அரூர் வட்டம், முத்து நகரைச் சேர்ந்த விவசாயி மணி (68). இவரது நிலத்தில் இருந்த சொட்டு நீர்ப் பாசன குழாய்களை மர்ம நபர்கள் அண்மையில் திருடிச் சென்றனர். இதேபோல, ஈட்டியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பையன் (42), கூச்சனூரைச் சேர்ந்த குமரன் (47) ஆகியோரது நிலத்தில் இருந்த சொட்டு நீர்ப் பாசன குழாய்களும் அடுத்தடுத்து திருடு போனது. இவைகளின் மதிப்பு ரூ.2.90 லட்சம்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த அரூர் போலீஸார், அரூர் வட்டம், கௌôப்பாறை கிராமத்தைச் சேர்ந்த சென்னப்பன் (35), முருகன் (45) ஆகிய 2 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஏற்கெனவே அரூரைச் சேர்ந்த ஜெயசேகர ராஜ் (45), கீரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் (50) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.