ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

பென்னாகரம் அருகே மாமியார் கொலை: மருமகன் கைது

பென்னாகரம் அருகே மாமியாரை கல்லால் அடித்துக் கொன்ற மருமகனை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

பென்னாகரம் அருகே மாமியாரை கல்லால் அடித்துக் கொன்ற மருமகனை போலீஸார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ள பி. அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி ஜெயக்கொடி (58). இவர்களது மகள் தீபா (33). தீபாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேலு (40) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், வேலு தொடர்ந்து மது அருந்திவிட்டுவந்து, வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து மனைவியை அடித்துத் துன்புறுத்தி வந்ததாகத் தெரிகிறது. இதனால் வீட்டில் கோபித்துக் கொண்டு, கடந்த சில மாதங்களுக்கு முன் குழந்தைகளுடன் தாய் வீட்டுக்குப் போனார் தீபா.

வியாழக்கிழமை காலை குழந்தைகளுடன் மனைவியையும் அழைத்து வர வேலு அங்கு சென்றபோது, தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கீழே கிடந்த கற்களை எடுத்து மாமியாரைத் தாக்கியுள்ளார் வேலு.

பலத்த காயமடைந்த மாமியார் ஜெயக்கொடிக்கு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை ஜெயக்கொடி உயிரிழந்தார். இதையடுத்து, பென்னாகரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வேலுவைக் கைது செய்தனர். விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.