தொகுதி அறிமுகம்: பர்கூர்

தொகுதி எண் :52

அறிமுகம்:

1977-ஆம் ஆண்டு புதிய தொகுதியாக பர்கூர் சட்டப்பேரவைத் தொகுதி உதயமானது. தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றியும், தோல்வியும் மாறிமாறி பெற்ற தொகுதியாகும். தற்போது மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரையின் சொந்த தொகுதியும் கூட.

 மாம்பழ சாகுபடியில் முன்னணி வகிக்கும் இந்த தொகுதியின் தலைநகரான பர்கூர், குட்டி சூரத் என்று அழைக்கப்படும் அளவுக்கு ஜவுளி வியாபாரத் தொழிலில் சிறந்து விளங்குகிறது. இங்குள்ள ஜவுளி மார்க்கெட்டில் ஒரே இடத்தில் 1000-க்கும் மேற்பட்ட ஜவுளிக் கடைகள் உள்ளன. விவசாயமும், கிரானைட் மெருகூட்டும் தொழிலும் முக்கியத் தொழிலாக விளங்குகின்றன.

இந்த தொகுதியில் மூன்றில் 2 பங்கு மா விவசாயம், ஒரு பங்கு தென்னை விவசாயம். பனை மரங்களும் அதிகம் உள்ளன.

எல்லை:

கிழக்கே வேலூர் மாவட்டமும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை தொகுதியையும், மேற்கே வேப்பனஹள்ளி, கிருஷ்ணகிரி தொகுதியையும், வடக்கே ஆந்திர மாநிலத்தையும், தெற்கே தருமபுரி மாவட்டத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது. பர்கூர், நாகோஜனஅள்ளி ஆகிய பேரூராட்சிகளைக் கொண்டுள்ளது. மாநிலத்தில் இரண்டாவது பெரிய பரப்பளவு கொண்டுள்ள போச்சம்பள்ளி சந்தை இந்த தொகுதியில் உள்ளது. தமிழ், தெலுங்கு மொழி பேசுவோர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இந்த தொகுதியில் வன்னியர்கள், கொங்கு வேளாளர்கள், 24 மனை செட்டியார்கள் போன்ற வகுப்பினர் பரவலாக வசிக்கின்றனர்.

வாக்காளர்கள்:

ஆண்கள் : 1,13,613.

பெண்கள் : 1,12,976.

மூன்றாம் பாலினத்தினர் : 14.

மொத்த வாக்காளர்கள் : 2,26,603.

நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:

1. 1971  ஓ.த.கிருஷ்ணன் (திமுக)

2. 1977  ஆறுமுகம் (அதிமுக)

3. 1980  துரைசாமி (அதிமுக)

4. 1984  ப.ங.வெங்கடாசலம் (அதிமுக)

5. 1989  ஓ.த.ராஜேந்திரன் (அதிமுக ஜெ. அணி)

6. 1991  ஜெ.ஜெயலலிதா (அதிமுக)

7. 1996  உ.எ.சுகவனம் (திமுக)

8. 2001 ங.தம்பிதுரை (அதிமுக)

9. 2006  ங.தம்பிதுரை (அதிமுக)

10. 2009 ஓ.த.ஓ.நரசிம்மன் (திமுக)

11. 2011 கே.இ.கிருஷ்ணமூர்த்தி (அதிமுக)

தேர்தல் நடத்தும் அலுவலர்:

ஐ.கதிரேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர், கிருஷ்ணகிரி. 04342-235655, 9443418965.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்:

ஆர்.முருகன், வட்டாட்சியர், போச்சம்பள்ளி-9445000540.

இளவரசி, வட்டாட்சியர், பர்கூர்-9965313372.

கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர்:

 ஜெயகுமார், 8682056864.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com