எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கீழானூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அரூரை அடுத்த கீழானூரில் அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினர் புதன்கிழமை அகற்றினர்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 1:45 am

DIN

அரூரை அடுத்த கீழானூரில் அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினர் புதன்கிழமை அகற்றினர்.
அரூர் வட்டம், செல்லம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கீழானூரில் அரசுக்குச் சொந்தமான 1.76 ஏக்கர் நிலத்தை அந்தப் பகுதியிலுள்ள விவசாயிகள் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக புகார் தெரிவித்து பொதுமக்கள்,  அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இதையடுத்து, அரசுக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினர் சர்வே செய்தனர். தொடர்ந்து, அரூர் வட்டாட்சியர் கே. பரமேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வருவாய் ஆய்வாளர் ஆ. சிவஞானம், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் எம். முத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சி. வேலாயுதம் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.