உயர்த்தப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர் தினக்கூலியை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) சார்பில் தருமபுரி மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் ரகுபதி தலைமை வகித்தார். பொருளாளர் ஜீவா உள்ளிட்ட கோட்ட நிர்வாகிகளும், ஓய்வுபெற்ற மின்வாரியத் தொழிலாளர் நலச் சங்கத்தின் தலைவர் சுந்தரமூர்த்தி, செயலர் விஜயன் உள்ளிட்டோரும் பேசினர்.
ஒப்பந்தத் தொழிலாளர்களின் தினக்கூலியை ரூ. 250 இல் இருந்து ரூ. 380 ஆக உயர்த்தி வழங்க மின்வாரியம் எடுத்துள்ள முடிவை ஒப்பந்ததாரர்களிடம் வலியுறுத்தி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்ட கோரிக்கை மனுவும் மேற்பார்வைப் பொறியாளர் கணபதிராவிடம் வழங்கப்பட்டது. முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜகவின் ‘ஹாட்ரிக்’ வெற்றி!
பாஜகவின் ‘ஹாட்ரிக்’ வெற்றி!

திருவண்ணாமலையில் தூய்மைப் பணிகள்: முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

பிரக்ஞானந்தா - கீமர் மோதல் ‘டிரா’
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
