இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வரலாற்றை மீட்டுருவாக்கம்  செய்யக் கூடியதே நாவல்

நாவல் என்பது அந்தந்தக் காலத்தின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யக் கூடியது என்றார் கவிஞர் "பூவிதழ்' உமேஷ்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 2:48 am

DIN

நாவல் என்பது அந்தந்தக் காலத்தின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யக் கூடியது என்றார் கவிஞர் "பூவிதழ்' உமேஷ்.
நூலக இயக்ககமும், வாசக சாலையும் இணைந்து தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் நடத்திய,  எழுத்தாளர் கரிச்சான் குஞ்சுவின் "பசித்த மானிடம்' எனும் நாவல் குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில், அவர் மேலும் பேசியது:-
1910-களில் தொடங்கி 1960-ஆம் ஆண்டு வரை பசித்த மானிடம் நாவலின் காலகட்டம் நிகழ்ந்திருக்கிறது. முதலாவதாக ஓரினச் சேர்க்கை பற்றி வெளிப்படையாகப் பேசிய தமிழ் நாவல் இதுவாகத்தான் இருக்கும். 
இரண்டாவதாக நோயாளியின் பயணத்தை, குறிப்பாக பலராலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட தொழுநோயாளியின் பயணத்தை விவரிக்கும் நாவலாக கரிச்சான் குஞ்சு விளங்குகிறது.
தமிழ் நாவல்களில் தலைசிறந்த 100 நாவல்களை வரிசைப்படுத்தினால் அதில் பசித்த மானிடம் இருக்கும் என எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக நாவல் என்பது அந்தந்த காலத்தின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யக் கூடியது. அதனை கரிச்சான் குஞ்சு செம்மையாகச் செய்திருக்கிறார் என்றார் உமேஷ்.
இதையடுத்து, வாசகர் பார்வையில் தலைமை ஆசிரியர் மா. பழனி பேசியது:-
1978-களில் வெளியிடப்பட்ட பசித்த மானிடம்,  இப்போது ஏழாம் பதிப்பைக் கண்டிக்கிறது. ஒவ்வோர் இடத்தையும் பற்றி ஆசிரியர் விவரித்துச் செல்லும்போது, வாசகனின் மனதில் அந்த இடம் காட்சியாக ஓடும். அந்தளவுக்கு சிறப்பாக எழுதியிருக்கிறார் கரிச்சான் குஞ்சு என்றார்.
இதன்பின்னர், வாசகர் பார்வையில் ஆசிரியை சுமதி பேசும்போது, "இதிகாசத்தின் பண்புகள் இந்த நாவலில் வெளிப்படுகின்றன' எனக் குறிப்பிட்டார். 
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நூலகர் கல்யாணி,  "சிறுமிகளையும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் இந்தக் கால கட்டத்தில்தான் இதுபோன்ற நாவல்களை மறுவாசிப்பு செய்ய வேண்டியுள்ளது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.