காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

விலையில்லா இசைக்கருவிகள் பெற நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

விலையில்லா இசைக் கருவிகள் பெற, நலவாரியத்தில் பதிவு செய்துள்ள நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி தெரிவித்துள்ளார்.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 9:28 am IST

விலையில்லா இசைக் கருவிகள் பெற, நலவாரியத்தில் பதிவு செய்துள்ள நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கலை பண்பாட்டுத் துறையின் கீழ், இயங்கும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவுபெற்றுள்ள கலைஞர்களுக்கு ரூ. 10,000 மதிப்பில் விலையில்லா தொழில் கருவிகள், ஆடை அணிகலன்கள் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது. 
 தருமபுரி மாவட்டத்தில், 10 கலைஞர்களுக்கு, விலையில்லா இசைக்கருவிகள், ஆடை அணிகலன்கள் வழங்கப்பட உள்ளன. எனவே, இந்த உதவி தேவைப்படுவோர், தங்களின் முழு விவரம், நலவாரிய அடையாள அட்டை நகல், வாரிய உறுப்பினர் பதிவினை தற்போது வரை புதுப்பித்த விவரம், உதவி தேவைக்கான காரணத்தின் விளக்கம் மற்றும் இசைக்கருவி, ஆடை, அணிகலன்கள் தேவைப்பட்டியல், அதற்கான தோராய விலை மதிப்பீடு ஆகியவற்றை வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள், மண்டல உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை,  தளவாய்ப்பட்டி- திருப்பதி கவுண்டனூர் சாலை, அய்யம்பெருமாம்பட்டி- அஞ்சல், சேலம் - 636 302 என்கிற  முகவரிக்கு தங்களது விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும். விவரங்களுக்கு 0427 2386197 என்கிற எண்ணை தொடர்புகொள்ளலாம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.