பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

வாசிக்க வாசிக்கத்தான் மொழிக் கிடங்கு பெருகும்: எழுத்தாளர் சுரேஷ் பிரதீப்

வாசிக்க வாசிக்கத்தான் நம்முள் இருக்கும் மொழிக் கிடங்கு பெருகும் என்றார் எழுத்தாளர் சுரேஷ் பிரதீப்.

Updated On :

வாசிக்க வாசிக்கத்தான் நம்முள் இருக்கும் மொழிக் கிடங்கு பெருகும் என்றார் எழுத்தாளர் சுரேஷ் பிரதீப்.
தருமபுரி புத்தகத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை மாலை "ஏன் வாசிக்க வேண்டும்' என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:
மொழி தோன்றி 6 முதல் 7 ஆயிரம் ஆண்டுகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதற்கு முன்பு சுமார் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் பேசத் தொடங்கியிருக்கலாம்.
தான் பார்த்த ஒன்றை வியப்பால் மற்றவர்களுக்கு அதனை உணர்த்த முற்பட்டிருக்கலாம்.  அது பேச்சாகி,  பிறகு மொழியாகியிருக்கிறது.   ஒவ்வொரு சொற்களுக்கும் ஒரு குறியீட்டை மனிதன் வடிவமைத்தான்.   அந்த மொழிக் குறியீட்டின் பயன்பாட்டைப் புரிந்து கொள்ள வாசிப்பு நமக்குத் தேவைப்படுகிறது.
வாசிக்க வாசிக்கத்தான் நம்முள் இருக்கும் மொழிக் கிடங்கு பெருகும்.  மொழிக் கிடங்கு பெருகினால்தான் பேச்சு மொழி மேம்படும்,  மனிதனின் சுய சிந்தனை வளரும்.
வீடுகளில் சமத்துவமின்மை,  ஜனநாயகத் தன்மையின்மை ஆகியவற்றால்தான் குடும்பம் சிதைகிறது.  மகிழ்ச்சியாக வாழ வேண்டிய தருணங்களில் பெண் வீடுகளுக்குள் முடங்கிவிடுகிறாள்.  இதனை ஆண்கள் உணர்வதில்லை.  பாவனைகளுக்குள் பெண் சிக்கிக் கொள்கிறாள்.  இவை குறித்தெல்லாம் பேச வேண்டியுள்ளது என்றார் சுரேஷ் பிரதீப். 
மூன்றாம் நாள் நிகழ்வுக்கு விஜய் கல்வி நிறுவனங்களின் தலைவர் டிஎன்சி. மணிவண்ணன் தலைமை வகித்தார்.  பென்னாகரம் அரசுக் கலைக் கல்லூரி முதல்வர் க. செல்வவிநாயகம், இந்திய மருத்துவச் சங்கத் தலைவர் டாக்டர் மு. சந்திரசேகர்,  தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
முன்னதாக,  புத்தகத் திருவிழாவின் வரவேற்புக் குழு பொருளாளர் து. கண்ணன் வரவேற்றார். முடிவில், வ. செளந்திரபாண்டியன் நன்றி கூறினார்.


அறிவுதான் சொத்து!
நிகழ்ச்சியில் "காலத்தின் குரல்' என்ற தலைப்பில் ஊடகவியலாளர் மு. குணசேகரன் பேசியது:
மனிதர்களை ஏற்றத் தாழ்வின்றி கண்ணியமாக நடத்துவதற்கு நாம் மேலும் மேலும் படிக்க வேண்டியுள்ளது.
பள்ளிப் படிப்பின்போது மிகக் குறைந்த மதிப்பெண்களை எடுத்த அம்பேத்கர்தான்,  பிற்காலத்தில் உலகிலேயே மிகப்பெரிய பல்கலைக்கழகங்கள் என்று அப்போது கருதப்பட்ட இரண்டிலும் படித்தவர்.  மதிப்பெண்களைக் கடந்தது வாழ்க்கை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு காலத்தில் நிலம்தான் சொத்து,  இப்போது அறிவுதான் சொத்து.  தொடர்ந்து வாசிப்பதன் மூலமும், பயணங்களின் மூலமும் கிடைக்கும் அரிய சொத்து, அறிவு என்றார் குணசேகரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.