கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

வெள்ள நிவாரண உதவிகள் அனுப்பி வைப்பு

கேரள மாநிலத்தில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தருமபுரி மக்கள் மன்றம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ரூ. 5 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகள் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 8:29 am IST

கேரள மாநிலத்தில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தருமபுரி மக்கள் மன்றம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ரூ. 5 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகள் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, சமையல் எண்ணெய், பொடி வகைகள், வெங்காயம், இஞ்சி மற்றும் மசாலாப் பொருட்கள் அடங்கிய ஒரு தொகுப்பு ரூ. 815 மதிப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, 500 குடும்பங்களுக்குத் தேவையான தொகுப்புகள் மற்றும் இதர நிவாரணப் பொருட்களும் ஞாயிற்றுக்கிழமை சேகரிக்கப்பட்டன.
தருமபுரி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், புரவலர்கள் இதற்கான தொகைகளை பங்களித்தனர். கேரள மாநிலம் பாலக்காட்டில் தற்போது பணியாற்றி வரும் தன்னார்வலர்கள் மூலம் இவை நேரடியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
தொடர்ந்து இன்னும் சில நாள்களுக்கு கேரள மாநிலத்துக்கு நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கும் பணி தொடரும் என மக்கள் மன்றத்தினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.