தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் மருதிப்பட்டி டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு அண்மையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தேசிய அளவிலான ரோப் ஸ்கிப்பிங் போட்டிகள் , சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் டிசம்பர் 26 முதல் 29-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் மருதிப்பட்டி டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கோமதி, பரிமளா, யாழினி, மதிவதனி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதையடுத்து, இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாணவியர்களுக்கு தேவையான உதவிகளை தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் கே.வி.கே சாமி வழங்கினார்.
இதில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வைரமணி, பள்ளித் தலைமை ஆசிரியர் மகாதேவன், உடற்கல்வி ஆசிரியர் சாமுவேல் வில்லிங்கடன், ஆசிரியர் இளஞ்செழியன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாணவிகளை பாராட்டி, வழியனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை!

முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்ததாக வழக்கு! விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ பிணை: விசாரணை ஒத்திவைப்பு

தூத்துக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பே முதன்மை இலக்கு: எஸ்.பி. இரா. சிவ பிரசாத்

கரூா் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 3 வழக்குகளில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் ஆஜா்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


