"தமிழின் சிறப்பை இளைய தலைமுறையினருக்கு கற்றுத்தர வேண்டும்'
தமிழ் மொழியின் சிறப்பை இளைய தலைமுறையினருக்கு கற்றுத்தர வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் கேட்டுக் கொண்டார்.


தமிழ் மொழியின் சிறப்பை இளைய தலைமுறையினருக்கு கற்றுத்தர வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் கேட்டுக் கொண்டார்.
தருமபுரி தமிழ்ச் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தைத் திங்கள் சிறப்பு நிகழ்ச்சிக்கு அச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ந.ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற வரலாற்று ஆசிரியை தில்லைக்கரசி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் தந்தையர் நாடு என்கிற பொருளில் திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேசியது:
தமிழில் அச்சு வழியில் நூல்கள் வெளிவரத் தொடங்கி 170 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதற்கு முந்தைய காலத்தில், நம் முன்னோர் பனை ஓலைகளில் இலக்கியங்களை எழுதி நமக்கு அளித்துள்ளனர். நமது தமிழ்மொழி இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.
வழி வழியாக நாம் தொடர்ந்து வாசித்து வருவதால்தான் மொழி இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. உலகத்தில் 4 ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. நமது இந்தியாவில் 1,600 மொழிகள் உள்ளன. உலகளவில் கிரேக்கம், ஈப்ரு, லத்தீன், சம்ஸ்கிருதம், சீனம், தமிழ் ஆகிய ஆறு மொழிகள் மட்டுமே 2000 ஆண்டுகளை கடந்து நிலைத்துள்ளன.
இவற்றிலும், இலக்கியம், இலக்கணத்துடன் இன்றுவரை உயிர்ப்போடு இருப்பது சீனமும், தமிழும் மட்டுமேயாகும். அதிலும் தமிழ்மொழி மட்டுமே மூலப்பொருள்களில் காப்பியங்களைக் கொண்டுள்ளது. தமிழகத்தில் பெரியாரின் எழுத்துச் சீர்த்திருத்தத்தை அரசு ஏற்றுக்கொண்ட பிறகு தமிழ் எழுத்துக்கள் புதிய வடிவம் பெற்றது.
இந்த எழுத்துருக்கள்தான் தற்போது, இணையத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அச்சீர்த்திருத்தம் நிகழவில்லை எனில் இணைய எழுத்துக்களை நாம் பெற்றிருக்க முடியாது. தமிழ்மொழி இனம், பண்பாட்டின் அடையாளம்.
நாம் தாய் மொழியை மறந்தால் நமது அடையாளத்தை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும். தற்போதைய சூழலில் பள்ளிகளில் தமிழ் கற்றுத்தரப்படுவதில்லை. வீதிமன்றங்களிலும் தமிழ் இல்லை. நாம் சுயமரியாதையோடு வாழ மொழியைக் காக்க வேண்டும். இதற்காக, நமது குழந்தைகளுக்கு தமிழின் சிறப்பை கற்றுத்தர வேண்டும் என்றார்.
முன்னதாக சங்கச் செயலர் வெ.செளந்திரபாண்டியன் வரவேற்றார். நிறைவில், பொருளாளர் சச்சதானந்தம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...