ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை விரைந்து தொடங்கக் கோரி, எல்.ஐ.சி. ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன் அதன் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஊழியர் சங்க கிளைத் தலைவர் வேடியப்பன் தலைமை வகித்தார். முதல்நிலை அதிகாரிகள் சங்க உதவி கோட்ட மேலாளர் குமார், வளர்ச்சி அதிகாரிகள் சங்க கிளைச் செயலர் குமரேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், ஊதிய உயர்வுக்கான பேச்சு வார்த்தையை விரைந்து தொடங்க வேண்டும். 1995-ஆம் ஆண்டு ஓய்வூதியத் திட்டத்தில் இணைய வாய்ப்பளிக்க வேண்டும். மூன்றாம் மற்றும் நான்காம்நிலை ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். முதல்நிலை அதிகாரிகளின் பதவி உயர்வில் மாற்றங்களை திரும்பப் பெற வேண்டும். வளர்ச்சி அதிகாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதில், ஊழியர் சங்க கோட்ட இணைச் செயலர் மாதேஸ்வரன், கிளைச் செயலர் மகேந்திரன், பொருளாளர் சரவண குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத்துறை நிறுவனத்தில் ஆப்ரேட்டர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

திருச்சி தாயுமானசுவாமி கோயிலில் சித்திரைத் தேரோட்டம்!
டாக்ஸிக் வெளியீட்டில் மீண்டும் மாற்றம்!
ஐபிஎல் 2026: ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த ரியான் பராக்!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

