கிராமப்புறச் சிறார்களுக்கான விழித் திறப்பாக' கோடை முகாம்!

வயல்வெளியும், மரங்களும் நிறைந்த அற்புதச் சூழலில், கிராமப்புறச் சிறார்களுக்கான 15 நாள் கோடை முகாமை முற்றிலும்
Updated on
2 min read

வயல்வெளியும், மரங்களும் நிறைந்த அற்புதச் சூழலில், கிராமப்புறச் சிறார்களுக்கான 15 நாள் கோடை முகாமை முற்றிலும் இலவசமாக நடத்துகிறது தருமபுரியைச் சேர்ந்த நடைபழகு' அமைப்பு.
கோடை விடுமுறையில் நகர்ப்புறங்களில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு, நடனம், பாட்டு, கராத்தே போன்ற பயிற்சிகளுடன் கூடிய கோடை முகாம்களைக் கணிசமான கட்டணங்களை வசூலித்து நடத்திவருகின்றன.
இந்தச் சூழலில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறார்களிடம், பாரம்பரிய விளையாட்டு, கலை அம்சங்களைக் கற்றுத் தருவதுடன் சமூக அக்கறையையும் உருவாக்கும் முயற்சி எங்காவது அரிதாகத் தென்படுவதையும் தவிர்க்க முடியாது.
15 நாள் முகாமில் 80 பேர் பங்கேற்பு
இதன்படி, தருமபுரியில் இருந்து பாலக்கோடு செல்லும் வழியிலுள்ள கம்மாளப்பட்டி கிராமத்தில் கோடை முகாம் கடந்த 11ஆம் தேதி தொடங்கியுள்ளது. வரும் 25ஆம் தேதி வரை மொத்தம் 15 நாள்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ள முகாமில், குண்டுக்கல் நகரிலும், கம்மாளப்பட்டியிலும் என இரு பிரிவாக சுமார் 80 பேர் பங்கேற்றுள்ளனர். பொறியியல் பட்டதாரி ஆர். முனிராஜ், தனது நடைபழகு' என்ற அமைப்பின் மூலமாக இந்த முகாமை நடத்தி வருகிறார்.
பாரம்பரிய கலைகளான ஒயிலாட்டம், கும்மி போன்றவையும் பாரம்பரிய விளையாட்டான சிலம்பப் பயிற்சியும் நடத்தப்படுகிறது. படம் வரைதல், களிமண் பொம்மைகள் செய்தல் ஆகியவற்றுடன், மாலை நேரங்களில் மேடைப் பேச்சு, சுற்றுச்சூழல், வாழ்வியல், கல்வி போன்றவற்றைக் குறித்த எளிய கருத்தரங்குகளும் நடத்தப்படுகின்றன.
நடைபழகு' ஏன்- எதற்கு- எப்படி?
இந்த நிலையில், நடைபழகு' அமைப்பு குறித்தும், கோடை முகாம் குறித்தும் முனிராஜிடம் கேட்டபோது, அவர் கூறியது:-
பொறியியல் பட்டம் பெற்ற பிறகு இரு ஆண்டுகள் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றினேன். சமூகத்துடன் எந்தவித தொடர்புமின்றி வேலைபார்ப்பது ஒரு விதமான ஒவ்வாமையை ஏற்படுத்தியது. வெளியே வந்துவிட்டேன்.
இடையே பிஎஸ்ஸி காட்சித் தொடர்பியல் படிப்பை முடித்தேன். தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்ஏ இதழியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன்.
பிறந்த ஊரில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 2017-ஆம் ஆண்டு நடைபழகு' அமைப்பு தொடங்கப்பட்டது.
பூவுலகின் நண்பர்கள், குக்கூ குழந்தைகள் வெளி ஆகிய அமைப்புகள் மூலமாக ஏற்படும் வெளிச்சத்தை கிராமத்தைச் சேர்ந்த சிறார்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் நடைபழகு' அமைப்பின் அடிப்படை.
நல்ல மனிதர்களை உருவாக்குவதே லட்சியம்!
ஊருக்குள் எளிமையான நூலகம் ஒன்றை அமைத்துள்ளோம். முகாம் நாள்களைத் தாண்டியும் சிறார்கள் படிக்கிறார்கள். சமூகத்தில் இருக்கும் குடிப் பழக்கம், சாதி, மத வேறுபாடு ஆகியவற்றைக் களையவும் சிறார்களிடமிருந்துதான் பேச வேண்டியுள்ளது.
எதிர்காலத்தில் நல்ல மனிதர்களை உருவாக்கத் தேவையான முகாம்களை தொடர்ச்சியாக மேற்கொள்ள இருக்கிறோம். தற்போதைக்கு சென்னையில் என்னுடன் பயிலும் நண்பர்கள் வந்து பயிற்சியளிக்கிறார்கள். நிதி உதவி செய்கிறார்கள் என்கிறார் முனிராஜ்.
ஏதாவதொரு படிப்பு என்ற திசையறியாப் பயணத்தில் சிக்கியுள்ள பின்தங்கிய, கிராமப்புற மாணவர்களுக்கு சமூக அக்கறையுடன் கூடிய விழித் திறப்பை (உவஉ ஞடஉசஐசஎ) ஏற்படுத்தி வருகிறது. நடைபலவற்றிலும் போட்டியை நோக்கியே ஓட வைக்கும் அவசர உலகில் இவர்களின் முயற்சி அரிதானது என்பதோடு அவசியமானதும்கூட!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com