நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மே 29-இல் கட்டடத் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

கட்டடத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, வருகிற மே 29 -ஆம் தேதி தொழிலாளர் நல அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என ஏஐடியூசி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On :14 மே 2018, 9:17 pm

கட்டடத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, வருகிற மே 29 -ஆம் தேதி தொழிலாளர் நல அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என ஏஐடியூசி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தின், தருமபுரி மாவட்டக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை அச்சங்கத்தின், மாவட்டத் தலைவர் மாதையன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலர் கே.ரவி, கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
இக்கூட்டத்தில், கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் ரூ.1,200கோடி நிதி இருந்தும், தொழிலாளர்களின் நலன் காக்கப்படாதது, ஆயிரக்கணக்கானோர் ஓய்வூதியம் கோரி மனு அளித்து காத்துக் கிடப்பது, விபத்து, மரணம் உள்ளிட்டவற்றுக்கு நிவாரண நிதிக்காக அலைக்கழிப்பு ஆகிவற்றுக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும். மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 29-ஆம் தேதி மாவட்டத் தொழிலாளர் நல அலுவலகம் முன் வீடு திரும்பா காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மாநிலச் செயலர் முனுசாமி, ஏஐடியூசி மாவட்டத் தலைவர் எம்.மாதேஸ்வரன், கட்டட சங்க மாவட்டப் பொதுச் செயலர் ஆர்.சுதர்ஷனன், பொருளாளர் விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.