மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

தருமபுரியில் காங்கிரஸ் கட்சி சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On :21 மே 2018, 10:47 pm

தருமபுரியில் காங்கிரஸ் கட்சி சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராஜீவ் காந்தியின் உருவப் படத்துக்கு, மாவட்டத் தலைவர் கோ.வி.சிற்றரசு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மாவட்ட முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சித்தையன், மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் முத்து, மோகன் குமார், நகரத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட நிர்வாகிகள் கனகராஜ், வேடியப்பன், பாண்டுரங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இளைஞர் காங்கிரஸ்: தருமபுரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் காமராஜர் அறக்கட்டளை அலுவலகம் முன் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் என்.தீபக்குமார் தலைமையில், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராஜாராம் வர்மா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பாடி நாகராஜன், மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பி.ஏ.குமரேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.ராஜவீரப்பன் உள்ளிட்டோர் ராஜீவ் காந்தியின் உருவுப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரியில் ராஜீவ்காந்தி நினைவு தினத்தை காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை கடைப்பிடித்தனர்.
ராஜீவ்காந்தியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் ரகமத்துல்லா தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் தகி, சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் ஷப்பீர் அஹமத், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் எம்.ஜேசுதுரைராஜ், நாராயண மூர்த்தி, மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் தீவிரவாத ஒழிப்பு உறுதி மொழியை காங்கிரஸ் கட்சியினர் ஏற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், ராஜீவ்காந்தியின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழியை ஏற்றனர்.
போச்சம்பள்ளியில்...
போச்சம்பள்ளி நான்கு வழிச்சாலையில் உள்ள ராஜீவ்காந்தி திருவுருவச் சிலைக்கு அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி நான்கு வழிச் சாலையில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலையின் முன் அக்கட்சியைச் சேர்ந்த பர்கூர் வட்டாரத் தலைவர் மு.விவேகானந்தன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது. இதில் ஞானம், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் மனோகரன் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் பாலாஜி, கணேஷ், நவாப், முருகன், தனபால், ஞானமூர்த்தி, பன்னீர், மாரி, மாது உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.