பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

மான் வேட்டை: ரூ.2 லட்சம் அபராதம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மான் வேட்டையாடியதாக மூவருக்கு ரூ.2 லட்சம் அபராதம் வியாழக்கிழமை விதிக்கப்பட்டது.

Updated On :25 மே 2018, 2:41 am IST

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மான் வேட்டையாடியதாக மூவருக்கு ரூ.2 லட்சம் அபராதம் வியாழக்கிழமை விதிக்கப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ராமியம்பட்டி வனப் பகுதியில் மொரப்பூர் வனச் சரகர் தீ.கிருஷ்ணன் தலைமையிலான வனத் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, 3 பேர் வனப் பகுதியில் சுற்றித் திரிவது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் குண்டல்மடுவு கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன் சிவக்குமார், ஜெயவேல் மகன் அசோகன், சீனிவாசன் மகன் காசி என்பது தெரியவந்தது. இந்த மூவரும் கம்பி வலைகளை அமைத்து வனப் பகுதியில் மான் வேட்டையாடியது
தெரியவந்தது.
இதையடுத்து, பிடிபட்ட மூவரையும் வனத் துறையினர் தருமபுரி மாவட்ட வன அலுவலர் க.திருமால் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். வன விலங்குகளை வேட்டையாடிய குற்றத்துக்காக இருவருக்கு தலா ரூ.66,500-ம், ஒருவருக்கு ரூ.67 ஆயிரம் உள்பட மொத்தம் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து தருமபுரி மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.